search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கன்னியாகுமரியில் விருந்தினர் மாளிகை-வணிக வளாகம் கட்டதிட்டம்
    X

    நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கன்னியாகுமரியில் விருந்தினர் மாளிகை-வணிக வளாகம் கட்டதிட்டம்

    • இடத்தை மேயர் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு
    • முக்கடல் அணையில் இருந்துவரும் தண்ணீரை தேக்கிவைப்பதற்கான நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் நாகர்கோவில் மாநக ராட்சிக்கு சொந்த மான இடத்தில் விருந்தினர் மாளிகை மற்றும் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இடத்தை மேயர் மகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி பேரூராட்சியில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான 40 சென்ட் நிலம் உள்ளது. இதில் கன்னியாகுமரி நகரபகுதி மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்துவரும் தண்ணீரை தேக்கிவைப்ப தற்கான தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. மீதி உள்ள காலி மனை இடத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் விருந்தினர் மாளிகை மற்றும் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து இந்த இடத்தினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது நாகர்கோ வில் மாநகராட்சி ஆணையாளர் அனந்த்மோகன், கன்னி யாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன், அகஸ்தீஸ்வ ரம் ஒன்றிய தி.மு.க செய லாளர் பாபு, கன்னி யாகுமரி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பூலோகராஜா, லிங்கேஸ்வரி, தி.மு.க.நிர்வாகிகள் ஆனந்த், பிரேம்ஆனந்த், பொன் ஜாண்சன், நிசார், பிரைட்ட ன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×