search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொல்லங்கோடு அருகே காவலாளி கொலை - டெம்போ டிரைவர் தப்பி ஓட்டம்
    X

    கொல்லங்கோடு அருகே காவலாளி கொலை - டெம்போ டிரைவர் தப்பி ஓட்டம்

    • படுகாயம் அடைந்த அவரை சிகிச் சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • அர்ஜுனன் இறந்ததை யடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு அருகே பாலோடு மணலி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 58).

    இவர் சூழல் பகுதியில் உள்ள சிமெண்ட் கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் கேரளா காரோடு தேவர்புரத்தைச் சேர்ந்த வினு (40) என்பவர் டிரை வராக வேலை பார்த்தார். சம்பவத்தன்று வினு வண்டி யில் சிமெண்ட் மூட்டை களை ஏற்றினார்.

    இது குறித்து பணியில் இருந்த காவலாளி அர்ஜுனன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வினு காவலாளி அர்ஜுனனை பிடித்து கீழே தள்ளினார்.கீழே விழுந்ததில் அர்ஜு னனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை சிகிச் சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் அனீஸ் கொல்லங் கோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். வினு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அர்ஜுனன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அர்ஜுனன் இறந்ததை யடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது.

    தலைமறைவாகியுள்ள வினுவையில் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ள. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வினு கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந் துள்ளனர்.

    Next Story
    ×