என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அடிக்கல் நாட்டு விழா
    X

    குளச்சலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அடிக்கல் நாட்டு விழா

    • அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார்
    • நகர்மன்ற தலைவர் நசீர் தலைமை தாங்கினார்

    கன்னியாகுமரி :

    குளச்சல் நகராட்சியில் காமராஜர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தை இடித்து விட்டு முற்றிலும் புதிய பஸ் நிலையம் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

    புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் நசீர் தலைமை தாங்கினார். ஆணையர் விஜயகுமார், துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், வார்டு கவுன்சிலர் குறைசா பீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ், ஒன்றிய செயலாளர்கள் பி.எஸ்.பி. சந்திரா, எப்.எம்.ராஜரத்னம், ரமேஷ்பாபு, நகர செயலாளர் நாகூர்கான், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டிஉதயம், கவுன்சிலர்கள் ஜெயந்தி, கோமளா, ஆறுமுகராஜா, மேரி, நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், அ.தி.மு.க. நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், விசைப்படகு சங்க செயலாளர் பிராங்கிளின், வெள்ளிச்சந்தை ஊராட்சி தலைவர் தாமஸ் கென்னடி உள்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த பூமி பூஜையில் அஞ்சாலியம்மன் கோவில் சுடலை மாடசுவாமி குருக்கள் மகேந்திரன், குளச்சல் ஆலிம் அப்துல்ரகுமான், கொட்டில்பாடு பங்குத்தந்தை ராஜ் ஆகியோர் பிரார்த்தனை செய்தனர்.

    Next Story
    ×