என் மலர்
உள்ளூர் செய்திகள்

சின்னமுட்டத்தில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
- பெட்ரோல் பங்கை மூட வலியுறுத்தி போராட்டம்
- விசைப்படகுகளும், நாட்டு படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறை முகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றன. இந்த நிலையில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் அமைக்கப் பட்டு வந்தது.
இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி அவர்கள் கடந்த 9-ந் தேதி முதல் 15 நாட்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். இருப்பினும் மீனவர்களின் எதிர்ப்பை மீறி நேற்று பெட்ரோல் பங்க் திறக்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்தும் பெட்ரோல் பங்கை மூட வலியுறுத்தியும் சின்ன முட்டத்தில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 100-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் விசைப்படகு களும், நாட்டுப்படகுகளும் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சின்னமுட் டம் புனித தோமையார் ஆலயம் முன்பு மீனவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்ட மும் நடத்தி வருகிறார்கள். இதனால் சின்னமுட்டத்தில் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது. அங்கு பாது காப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து 16- வது நாளாக சின்ன முட்டத்தில் மீனவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.






