search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி
    X

    கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி

    • ஆயுதங்கள் ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது
    • தீ விபத்தில் உயிரிழந்த வர்களின் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த நினைவிடத்தில் மலர் வளையம்

    கன்னியாகுமரி :

    1944-ம் வருடம் ஏப்ரல் மாதம் சுமார் மதியம் 2 மணி அளவில் மும்பை விக்டோரியா துறைமுகத்தில் போர்ட் ஸ்டிக்னி என்ற சரக்கு கப்பலில் வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் மும்பை நகரமே பூகம்பம் போல் அதிர்ந்து குலுங்கியது.

    அப்போது தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைக்கும் படை வீரர்கள் தீயில் கருகி இறந்தார்கள். அவர்களின் தொண்டினை போற்றும் பொருட்டும் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் தியாகத்தினை போற்றும் பொருட்டும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் ஒரு வார காலம் தீயணைப்பு தொண்டு நாளாக கடைபி டிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கன்னியா குமரி தீயணைப்பு நிலை யத்தில் தீயணைப்பு தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தில் மும்பை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைக்கும் படை வீரர்களுக்கு நீத்தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜவகர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் நீத்தார் நினைவு அஞ்சலி கடைப்பிடித்தனர்.

    Next Story
    ×