search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் மானியத்தில் எந்திரம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    X

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் மானியத்தில் எந்திரம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

    • ரூ. 31.20 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
    • விவசாயி சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 20 சதவிகித மானியம் கூடுத லாக வழங்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிராமங்களின் பஞ்சாயத்துகளில் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 2 விசை உழுவை (பவர் டில்லர்) அல்லது களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) வழங்கப்படும் என்பதை அடிப்படையாக கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பொதுப் பிரிவில் விசை உழுவை (பவர் டில்லர்) (8 குதிரை திறனுக்கு மேல்) 23, சிறப்பு பிரிவில் 5 மற்றும் களை எடுக்கும் கருவி (பவர் வீடர்) (5 குதிரைதிறனுக்கு மேல்) பொதுப்பிரிவில் 4 மற்றும் சிறப்பு பிரிவில் ஒன்று மானியத்தில் வழங்க ரூ. 31.20 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் விசை உழுவையினை பொறுத்த வரை, சிறு, குறு, பெண் விவசாயிகள், சிறப்பு பிரிவு விவசாயிகளுக்கு ரூ.85 ஆயிரம் அல்லது விசை உழுவையின் மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகையும், இதர பிரிவினருக்கு ரூ.70 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். களை எடுக்கும் கருவியினை பொறுத்தவரை சிறு, குறு, பெண் விவசாயிகள், சிறப்புப் பிரிவு விவசாயி களுக்கு ரூ.63 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகையும், இதர பிரிவினருக்கு ரூ.50 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். சிறப்பு பிரிவு விவசாயிகள் சிறு, குறு விவசாயி சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 20 சதவிகித மானியம் கூடுத லாக வழங்கப்பட உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் 19 கிராம ஊராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் தேரே கால்புதூர், பஞ்சலிங்கபுரம், ராஜாக்கமங்கலம் வட்டா ரத்தில் புத்தேரி, ஆத்திக் காட்டுவிளை, மேல கிருஷ்ணன்புதூர், தோவாளை வட்டாரத்தில் தோவாளை, மாதவலாயம், கடுக்கரை, குருந்தன்கோடு வட்டாரத்தில் கக்கோட்டு தலை, முட்டம், மேல்புறம் வட்டாரத்தில் மாங்கோடு, விளவங்கோடு, முஞ்சிறை வட்டாரத்தில் விளாத்துறை, தூத்தூர், கிள்ளியூர் வட்டாரத்தில் முள்ளங்கினாவிளை, மத்திக்கோடு, திருவட்டார் வட்டாரத்தில் செறுகோல், ஏற்றக்கோடு, தக்கலை வட்டாரத்தில் சடையமங்கலம் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் விசை உழுவை அல்லது களை எடுக்கும் கருவி பெற சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம், ஆதார் கார்டு நகல், சிறு, குறு விவசாய சான்றிதழ், சாதிசான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை உழவன் செயலி மூலம் பதிவு செய்வது கட்டாயமாகும். இத்திட்டம் உழவன் செயலியில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகே உள்ள வேளாண்மை பொறியியல் துறை, கோணம் தொழிற்பேட்டை உதவி செயற்பொறியாளர் மற்றும் அழகியமண்டபம் பனங்காலவிளை உதவி செயற்பொறியாளர் அலுவ லகங்களை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×