search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15-வது நிதிக்குழு அடிப்படை மானியத் திட்டத்தின் கீழ் கொட்டாரம் பகுதியில் ரூ.30 லட்சம் செலவில் குடிநீர்-சாலைப்பணிகள்
    X

    கோப்பு படம் 

    15-வது நிதிக்குழு அடிப்படை மானியத் திட்டத்தின் கீழ் கொட்டாரம் பகுதியில் ரூ.30 லட்சம் செலவில் குடிநீர்-சாலைப்பணிகள்

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவை கூடத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் 15-வது நிதிக்குழு அடிப்படை மானிய திட்டத்தின் கீழ்ரூ.30 லட்சம் செலவில் குடிநீர் மற்றும் சாலை பணிகள் மேற்கொள்வது என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவி செல்வகனி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜநம்பி கிருஷ்ணன் பேரூராட்சி துணைத் தலைவி விமலா ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

    கூட்டத்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பொன்முடி, கணேசன், கிறிஸ்டோபர் சந்திரமோகன், சரோஜா, செல்வன், நாகம்மாள், ரெத்தினம், வனிதா வசந்தகுமாரி இந்திரா அனிதா தங்க குமார் மற்றும் இளநிலை உதவியாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15- வது நிதிக்குழு அடிப்படை மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31 லட்சத்து15 ஆயிரம் செலவில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்வது, கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம் சாலை முதல் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் வரை ரூ.8 லட்சம் செலவில் வண்ணத் தரைத்தளம் அமைப்பது, கொட்டாரம் பேரூராட்சிக்குஉட்பட்ட லட்சுமிபுரம் கோட்டக்கரை சாலையில் தடுப்புச் சுவர் அமைத்து வண்ண தரைத்தளம் அமைப்பது, கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் திட்டபராமரிப்பு பணிகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×