search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டை ரெயில் பாதை பணி விரைவில் முடிக்கப்படும்
    X

    இரட்டை ரெயில் பாதை பணி விரைவில் முடிக்கப்படும்

    • கடலோர பகுதிகளில் அரிய வகை மண் எடுக்க அனுமதி அளித்திருப்பதால் மீனவ மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
    • விஜய்வசந்த் எம்.பி. பேட்டி

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டண சலுகையை மத்திய அரசு ரத்து செய்தி ருப்பதால் பல பேர் அவர்கள் பயணத்தையே நிறுத்தியிருக் கிறார்கள். இதனால் ரெயில்வேத் துறைக்கு வருவாய் இழப்பு தான். சாலை பராமரிப்புக்காக நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பொன்விழா நினைவுத்தூணை அகற்றி யுள்ளனர். அந்த நினைவுத் தூணை மீண்டும் நிறுவ வேண்டுகோள் விடுத்துள் ளோம். அதற்கான முயற்சிக ளையும் அதிகாரிகளிடம் பேசி எடுப்போம். அது நினைவுச்சின்னம் அதை அகற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    அத்தியாவசிய பொருட் கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதற்கு மத்திய அரசு செவி கொடுக்காமல் இருக்கிறது.

    இந்த வாரம் அதற்கு ஒருவிடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அரிசி முதல் அனைத்து அத்தியாவ சிய பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி.வரி கொண்டு வருவது என்பது சராசரி மக்களை மேலும் பலவீனப்படுத்துவதாக உள்ளது. இதற்கு மத்திய அரசு பதில் சொல்லியாக வேண்டும்

    குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணியை மேற்கொள்ள மத்திய மந்திரியை சந்தித்து பேசி உள் ளோம். அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து மண் எடுக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த கடி தத்தை வைத்து புதிய டெண் டர் போட பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளது. 47 பி சாலை விரைவில் திறக்கப்படும்.

    இரட்டை ரெயில் பாதை பணியை விரைவுப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி யுள்ளோம். குமரி மாவட்டத்தில் 47 பி நாற்கர சாலையில் சுங்கச்சாவடி அமைத்துள் ளதை கண்டித்து மத்திய அர சுக்கு கடிதம் கொடுத்துள் ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.

    குமரி மாவட்ட கடலோர பகுதி களில் அரிய வகை மண் எடுக்க அனுமதி அளித்திருப்பதால் மீனவ மக்கள் பாதிக்கப்படு வார்கள்.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசி உரிய தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×