search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் 3 நாட்கள் கரைப்பு - பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்
    X

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் 3 நாட்கள் கரைப்பு - பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

    • இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள்
    • மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது

    நாகர்கோவில் :

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும்.

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.இதையடுத்து இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள். வீடுகளிலும், பொது இடங்களிலும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டும் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் 30-ந் தேதி சில இந்து அமைப்புகள் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். மேலும் 31-ந் தேதி காலையிலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் செய்யவும் இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்து உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் அடுத்த மாதம் 2,3,4-ந்தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. சிலைகளை கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கன்னியா குமரி, சொத்தவிளை, சின்னவிளை சங்குதுறை, பள்ளிக்கோணம், வெட்டுமடை, மிடாலம், தேங்காப்பட்ட ணம், கடற்கரை பகுதிகளிலும் திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது.

    விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு ஊர்வலங்கள் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிதாக இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லும்போது அதற்கென ஒதுக்கப்பட்ட வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.அடுத்தவர் மனதை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர். ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 2000 போலீசாரை ஈடுபடுத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    Next Story
    ×