என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாகர்கோவில் கலெக்டர் அலுவலக முன் பகுதியில் பழைய ரவுண்டானா இடித்து அகற்றம்
  X

  நாகர்கோவில் கலெக்டர் அலுவலக முன் பகுதியில் பழைய ரவுண்டானா இடித்து அகற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.1.50 கோடியில் புதியதாக கட்ட நடவடிக்கை
  • ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பொதுமக்களுக்கு இடை யூறு இன்றி பணி மேற்கொள்ளப்பட்டது.

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

  இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக சாலை இருவழி சாலை யாக மாற்றப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள பழைய ரவுண்டானாவை அகற்றிவிட்டு புதிய ரவுண்டானா மற்றும் கழிவுநீர் ஓடை அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

  இதற்கான டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அரவிந்த்தின் துரித நடவடிக்கை காரண மாக முதல் கட்டமாக அந்த பகுதியில் உள்ள கேபிள் வயர்கள் மாற்றப்பட்டு கழிவு நீர் ஓடைகள் கட்டும் பணி நடந்தது. நேற்று முன்தினம் ரவுண்டானாவின் தடுப்புச்சுவர்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது.

  இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் இருந்த ரவுண்டானா அகற்றும் பணி தொடங்கியது. உதவி கோட்ட பொறியாளர் ஜெகன் செல்வராஜ், உதவி பொறியா ளர்கள் மதன்குமார், வித்யா, ஹெப்சிபாய் ஆகியோரது மேற்பார்வையில் பணி விடிய விடிய நடந்தது. இன்று அதிகாலை முடிவடைந்தது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பொதுமக்களுக்கு இடை யூறு இன்றி இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

  ரவுண்டானாவில் இருந்த சுதந்திர பொன்விழா நினைவு ஸ்தூபி மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து அந்த பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு கான்கிரீட்டுகள் அமைக்கப் பட்டு உள்ளது.

  அந்த பகுதி முழுவதும் தடுப்பு கம்பிகளால் மூடப்பட்டு உள்ளது. இன்று வழக்கம் போல் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. பழைய ரவுண்டானா அகற்றப்பட்ட தையடுத்து புதிய ரவுண்டான அமைக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை ஆர்.பி.ஆர். நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். என்ஜினீயர் ஆர்.பி. ராகுல் மேற்பார்வையில் பணி நடக்கிறது.

  ரவுண்டானாவின் மாதிரி தோற்றத்தை மணல் மூடைகளால் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பரீட்சார்த்த முறையில் ரவுண்டானா அமைக்கப்பட்ட பிறகு கட்டுமான பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

  Next Story
  ×