search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் தினசரி கொரோனா பாதிப்பு 100-ஐ நெருங்குகிறது
    X

    குமரியில் தினசரி கொரோனா பாதிப்பு 100-ஐ நெருங்குகிறது

    • மாவட்ட எல்லை பகுதிகளில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    இதனால் குமரி மாவட்ட எல்லை பகுதி களில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளிலும் அதிகாரிகள் கொரோனா சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேற்று மாவட்டம் முழுவதும் 1158 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 92 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் ஆண்கள், 56 பேர் பெண்கள் ஆவார்கள்.

    நெல்லையில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரத்தில் 5 பேரும், கிள்ளியூரில் 8 பேரும், நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், தோவாளையில் தலா 7 பேரும் தக்கலையில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கு மாவட்ட பகுதகளில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக மேல்புறம், முஞ்சிறை, குருந்தன்கோடு, திருவட்டார் ஒன்றியங்களில் பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

    மேல்புறம், குருந்தன்கோட்டில் தலா 12 பேரும், முஞ்சிறையில் 15 பேரும், திருவட்டா ரில் 10 பேரும், பாதிக்க ப்பட்டு ள்ளனர். கொரோனா தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்கி வருகிறது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் 775 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதாவது கடந்த ஆறு மாதத்தில் 20,189 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்பொழுது 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கொேரானா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    சனிக்கிழமையான நாளை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

    முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் ஏராளமானோர் உள்ளனர்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொரோனா பரவல் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரி கள் வேண்டுகோள் விடுத்து ள்ளனர்.

    Next Story
    ×