search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்
    X

    நாகர்கோவிலில் இன்று வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்

    • பார்வையாளர் சரவணவேல்ராஜ் பங்கேற்பு
    • “18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும்.

    நாகர்கோவில், நவ.26-

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சரவண வேல்ராஜ் பங்கேற்று அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது "குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 883 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்களும், 143 இதர வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். 1698 வாக்குச்சா வடிகள் உள்ளன" என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் கூறியதாவது:-தேர்தலுக்கு முந்தைய நாள் வரை 18 வயது நிரம்பிய தகுதியா னவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யும்போது அந்த வாக்காளர் குறித்த விவரங்கள் முழுமையாக தெரிந்த பிறகு நீக்கம் செய்ய வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாறி உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட காற்றாடிதட்டு பகுதியில் சில வாக்காளர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று வாக்களிக்க வேண்டி யுள்ளது. எனவே அந்த வாக்காளர்களை அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கா ளர் பட்டியலில் பெயர் நீக்கம் தற்போது அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. வீடுகள் மாறி இருந்தால் கூட அதிகாரிகள் அந்த வாக்காளர்களின் பெயர் களை நீக்கி விடுகிறார்கள்.

    எனவே முறையாக ஆய்வு செய்து பெயர் நீக்கம் செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஆண்கள், பெண்கள் மற்றும் பொது என பிரிக்கப்பட்டு எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது? என்று தெரிவிக்கப்படும். ஆனால் தற்போது வரை அந்த தகவல் தெரிவிக்கவில்லை. அதை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதிலளித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முக வேல்ராஜ் பேசியபோது, "18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். யாரும் விடுபட்டு விடக்கூடாது. இதற்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யும்போது அதற்கான படிவங்கள் முறையாக வழங்கப்பட்டால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தலைமை தேர்தல் அதிகாரி யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தை பொறுத்த வரை ஒரு வாக்குச்சாவடியில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை. 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆண், பெண் மற்றும் பொது என வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட வேண்டும்" என்றார்.

    முன்னதாக டதி பள்ளி மற்றும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகவேல்ராஜ் மற்றும் கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    கூட்டத்தில் வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணி யம், சப்-கலெக்டர் கவுசிக், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், தி.மு.க. சார்பில் வர்கீஸ், பா.ஜனதா சார்பில் ஜெகதீசன், அ.தி.மு.க. சார்பில் ஜெயகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கிமுத்து, தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×