search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட தொழிலாளி கொலை:கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை - சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    X

    கட்டிட தொழிலாளி கொலை:கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை - சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலி பர்களுக்கும் ராஜதுரைக் கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்திருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.
    • சி.சி.டி.வி. கேமராவில் ராஜதுரை அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எறும்புக்காடு புல்லு விளை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் ராஜதுரை வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் நேற்று காலை மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் ராஜதுரை பிணமாகக் கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராஜதுரை உடலில் காயங்கள் இருந்தது.மர்ம நபர்கள் அவரை செங்கற்களால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து பிணமாக கிடந்த ராஜதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    கொலை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சி.சி.டி.வி. கேமராவில் ராஜதுரை அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலி பர்களுக்கும் ராஜதுரைக் கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்திருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.

    இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×