என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடிமுனை புனித பர்த்தலோமையார் ஆலய அர்ச்சிப்பு விழா
    X

    கோடிமுனை புனித பர்த்தலோமையார் ஆலய அர்ச்சிப்பு விழா

    • நாளை காலை 6.15 மணிக்கு தற்காலிக ஆலயத்தில் வைத்து திருப்பலி நடக்கிறது.
    • இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது.

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கோடிமுனை புனித பர்த்தலோமையார் புதிய ஆலய அர்ச்சிப்பு விழா நாளை (7-ந்தேதி) நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பங்கு குடும்ப விழாவும் தொடங்கு கிறது. இதனை முன்னிட்டு நாளை காலை 6.15 மணிக்கு தற்காலிக ஆலயத்தில் வைத்து திருப்பலி நடக்கிறது.

    10 மணிக்கு பால் பாய்த்தல், மாலை 5 மணிக்கு கொடிமரம், புதிய ஆலயம் அர்ச்சிப்பு ஆகியவை நடக்கிறது. இதில் கோட்டார் பிஷப் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். அனைத்து பக்த சபை இயக்கங்கள், தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள், திருவழி பாட்டுக்குழு, பீடச்சிறார்கள் மற்றும் பாடகர் குழுவினர் சிறப்பிக்கின்றனர். அருட்பணியாளர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை தினமும் காலை திருப்பலி, ஜெபமாலை மற்றும் திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 3-ம் நாள் காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

    9-ம் நாள் காலை 6.15 மணிக்கு திருப்பலி, திரு முழுக்கு, 10 மணிக்கு தேர் பவனி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர், இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது.

    10-ம் நாள் காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி மறையுரை ஆற்று கிறார். பங்கு பேரவை, நிதிக்குழு, தணிக்கை குழுவினர் சிறப்பிக்கின்றனர். இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு பேரவை மற்றும் பங்குத்தந்தையர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×