search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம்
    X

    குமரி மாவட்டத்தில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம்

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • அரசு மருத்துவமனைகளில் மேற்பரிசோதனைக்காக பரிந்துரை செய்யப்படும்.

    நாகர்கோவில் :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலின்படி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை சட்டசபையில் அறிவித்தார். அதனடிப்ப டையில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வருகிற 22-ந்தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட வுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் அதிகப்படியாக கண்டறி யப்படும் 3 வகையான புற்றுநோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கான கண்டறியும் பரிசோ தனைகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வாய் புற்றுநோயும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வனைத்து பரிசோ தனைகளும் வலியின்றி மிக விரைவில் மிக எளிதாக செய்துகொள்ளலாம்.

    சுகாதாரத்துறை அலுவ லர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பயனா ளர்களை யும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்வாழ்வு மையங்களாக செயல்பட்டு கொண்டி ருக்கும் அரசு துணை சுகா தார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதிக்க உரிய ஏற்பாடு களை செய்துள்ளனர்.

    முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இப்பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். மாவட்டத்தின் அனைத்து பயனாளர்களையும் 3 வருடத்திற்குள் பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இத்திட்டம் தொடங்கிய பின் சுகாதாரத்துறை பணியாளர்கள் உங்கள் இல்லங்கள் தேடி வந்து இத்திட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கு வார்கள். இந்த அழைப்பி தழ்களில் அருகாமை யிலுள்ள பரிசோதனை முகாம்கள் பயனாளர்க ளுக்கு தெரியப்படுத்தப்ப டும். இத்திட்டத்திற்கான அழைப்பிதழ்கள் பெறப்பட்டவுடன் பரிசோ தனை முகாமிற்கு சென்று பரிசோதனைகள் செய்திட மாவட்ட நிர்வாகத்தின சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இப்பரிசோதனைகள் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் உள்ளடங்கிய தனியார் மருத்துவமனை களிலும் உரிய பயிற்சிகள் பெறப்பட்டவர்களால் செய்யப்படும். பரிசோதனை யின் முடிவில் புற்றுநோய் அறிகுறிகள் இல்லை யெனில், 3 வருடத்திற்குப்பின் மறுபரிசோதனை செய்துக் கொள்ளலாம்.

    பரிசோதனையில் புற்று நோய் அறிகுறிகள் தென் பட்டால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேற்பரிசோதனைகள் செய்யும் வசதியுள்ள அரசு மருத்துவமனைகளில் மேற்பரிசோதனைக்காக பரிந்துரை செய்யப்படும்.

    வளர்ந்த நாடு என்ற பட்டத்திற்கு நாம் தயாராகும் நிலையில், தொற்றா நோய் களான சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. பிற தொற்றா நோய்களை போல் ஆரம்ப நிலையில் கண்டறிதலே புற்றுநோயினை குணப்ப டுத்த சிறந்த வழிமுறை. இதன்மூலம் புற்றுநோயி னால் வரும் உயிரிழப்புகளை வெகுவாக குறைக்கலாம்.

    தமிழக அரசின் மக்க ளைத்தேடி மருத்துவம், உலக அளவில் தொற்றா நோய்களுக்கு ஒரு முன்மா திரியான திட்டமாக செயல்பட்டு கொண்டி ருக்கின்றது. இத்திட்டத்தின் வெற்றி மக்களாகிய உங்க ளின் ஈடுபாட்டை சார்ந் துள்ளது. சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழக அரசின் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திடு மாறு கலெக்டர் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×