என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் அருகே கல்லூரி மாணவர் விஷ மாத்திரை தின்று தற்கொலை
- தந்தை வேலைக்கு போக கூறியதால் விபரீதம்
- கடந்த 4 மாதங்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி:
சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன்புதூரை அடுத்த தேரியான்விளையை சேர்ந்தவர் குமார். இவரது மூத்த மகன் முகேஷ் (வயது 19).
இவர், நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் வருடம் படித்து வந்தார்.
இவர், கடந்த 4 மாதங்களாக கல்லூரிக்கு செல்லவில்லை. இந்நிலையில் இவருடைய தந்தை குமார், மகன் முகேஷை கல்லூரிக் குத்தான் செல்லவில்லை, வேலைக்காவது போ என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மன வருத்தத்தில் முகேஷ் தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டு அவரது வீட்டின் அருகில் உள்ள பாட்டி வீட்டில் சென்று வாந்தி எடுத்தார்.
அப்போது முகேஷ் தான் மாத்திரை தின்ற தகவலை தாயாரிடம் கூறினார்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை குமார் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.