search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை அருகே சத்ரபதி வீரசிவாஜி சிலை உடைப்பு - போலீஸ் குவிப்பு-பதட்டம்
    X

    குழித்துறை அருகே சத்ரபதி வீரசிவாஜி சிலை உடைப்பு - போலீஸ் குவிப்பு-பதட்டம்

    • கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
    • சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகி ருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 அடி சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைக்கு சத்ரபதி வீரசிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இந்த சிலையை நேற்று நள்ளிரவில் ஒரு கும்பல் உள்ளே புகுந்து தலைப்பா கத்தை உடைத்து உள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை முதல் காட்டுத்தீ போல் பரவியது. இதை யடுத்து ஆலய நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் அங்கு குவிந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர். மேலும் ஆலய தலைவர் நடராஜன் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். தற்போது அப்பகுதியில் பதட்ட நிலை வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×