search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஜா முஜா வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்
    X

    'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்

    • குளச்சல் மரைன் போலீசில் மீனவர்கள் மனு
    • இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து விடுகிறது

    குளச்சல் :

    தேங்காய்பட்டணம் துறைமுகம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு களும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகு கள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.

    இந்த மீனவர்கள் தூண்டி லை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இந்நிலை யில் கடந்த சில மாதங்களாக தேங்காய்பட்டணம் கிழக்கு, மேற்கு பகுதியில் சில கட்டு மரங்கள் தடை செய்யப்பட்ட 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன்பிடித்து செல்வதாக அப்பகுதி கட்டு மர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து விடுகிறது என்றும், மீன்கள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்றும், இதனால் கட்டுமர மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் இந்த 'கஜா முஜா' வலையை பயன் படுத்தி மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்த கோரி நீரோடி முதல் ஆரோக்கிய புரம் வரை உள்ள கட்டுமரம், வள்ளம் மீன் பிடித்தொழில் பாதுகாப்பு சங்க மாவட்ட முன்னாள் செயலாளர் மரிய விஜயன் தலைமையில் மீனவர்கள் நேற்றிரவு குளச்சல் மரைன் போலீசில் மனு அளித்தனர்.

    அப்போது பூத்துறை, ராமன்துறை, இனயம் புத்தன்துறை கட்டு மரம், வள்ளம் மீனவர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×