search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்காவிளையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்
    X

    மங்காவிளையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்

    • ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


    நாகர்கோவில் : கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மங்காவிளையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மங்காவிளை ஊர் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மக்களின் வேண்டு கோளுக்கு இணங்க மாங்கா விளையில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சோதனைகள் பல வந்த போதும் இப்பகுதி மக்கள் அ.தி.மு.க.வின் பக்கம் என்றும் இருந்து வருகிறார்கள். ஊர் கூடி தேர் இழுப்பது போல அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து வருகிறார்கள்.

    வெற்றி, தோல்வி வாழ்க்கையில் நிரந்தரம் கிடையாது. என்றும் மக்களுக்காக உழைத்து வருகிறேன். உங்களின் உயர்வே எனது உயர்வு. தொடங்கப்பட்ட இப்பணிகள் விரைவில் நிறைவடையும். இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அய்யப்பன், கவுன்சிலர்கள் புனிதா கலையரசன், அமுதசெல்வி, செல்ல பெருமாள், பரமேஸ்குமார், மங்காவிளை ஊர் செயலாளர் துளசிமணி, பொருளாளர் பார்த்தசாரதி, பேராசிரியர் அய்யப்பன், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீராசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்.சேகர், டாஸ்மாக் பிரிவு செயலாளர் மணிகண்டன், புத்தளம் சிவகந்தன், தெங்கம்புதூர் முத்துகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×