என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை மேம்பாட்டு பணிக்கு ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்
    X

    சாலை மேம்பாட்டு பணிக்கு ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்

    • பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க சுற்றுப்பயணம் மேற் கொள்ளப்பட்டது.
    • 3 ஒன்றிய பகுதிகளில் 28.525 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகஸ் தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க சுற்றுப்பயணம் மேற் கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளையும், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர். குறிப்பாக சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வ தற்கு அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று இந்த பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

    இதன் அடிப்படையில் ஒன்றிய பகுதிகளில் கிராம பஞ்சாயத்து சாலை, ஒன்றிய சாலை பணிகளை மேற் கொள்வதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய ஊரக வளர்ச்சித்துறை அமைச்ச ருக்கும், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரை செய்யப் பட்டது. இதனை ஏற்று அரசு அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடியே 52 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியப் பகுதியை சேர்ந்த பாட்டுக்குளம் முதல் ஆரோக்கியபுரம் கடற்கரை சாலை 1.370 கி.மீ. நீளத்திற்கு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.49 லட்சத்து 80 ஆயிரமும், ஆம ணக்கன்விளை பள்ளி எதிர்புறம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.15 லட்சத்து 20 ஆயிரமும், ஹரிதாசபுரம் சாலையை சீரமைக்க ரூ.10 லட்சமும், லீபுரத்தில் உள்ள லெட்சுமிபுரம் சாலையில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.40 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றியத்தில் உள்ள பிற சாலைகளும் சீரமைக்கப்பட உள்ளது.

    இதைபோன்று தோவாளை ஒன்றியப் பகுதியை சேர்ந்த பாலமோர் ரோடு முதல் இறச்சகுளம் சாலை பாலமோர் ரோடு முதல் அருள் ஞானபுரம், மந்திரக்கோணம் சாலை, சங்கரலிங்கம் பாறை சாலை, காட்டுப்புதூர்-பரமனக் கோணம் சாலை, வீரவ நல்லூர் முதல் அனந்தனார் கால்வாய் சாலை, அண்ணாநகர் அருமநல்லூர் சாலை, சீதப்பால் பாலம் முதல் மண்ணடி சாலை, திருமலைபுரம் சாலை, பாலமார்த்தாண்டன் புதூர் ஆசிரியர் காலனி சாலை போன்றவை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும், ராஜாக்கமங்கலம் ஒன்றியப் பகுதியை சேர்ந்த பொழிக்கரை கிராமச்சாலை, வெள்ளமோடி விளை சாலை, தெங்கம்புதூர் பள்ளம்துறை சாலை என மொத்தம் 3 ஒன்றிய பகுதிகளில் 28.525 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×