search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முளகுமூடு பகுதியில் குளத்தில் பாசிகள் அகற்றம்
    X

    முளகுமூடு பகுதியில் குளத்தில் பாசிகள் அகற்றம்

    • பேரூராட்சி செயல் அலுவலருக்கு பொதுமக்கள் பாராட்டு
    • பல வருடங்களாக குளம் சுத்தம் செய்யப்படாத நிலையில் தற்போது குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    முளகுமூடு பேரூ ராட்சிக்குட்பட்ட 3, 4 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு உள்ள ஆள்காட்டி குளம் உள்ளது. இந்த குளத்திலுள்ள நீர் விவசாய நிலங்களுக்கு வரப்பிரசாதமாக காணப்பட்டது. ஆனால் குளம் ஆக்கிரமிப்பாலும், கழிவுநீர் பாய்ந்ததாலும் சீர்கேடு ஏற்பட தொடங்கி யது. இதனால் விவசாயிகள் ஆடு, மாடுகளை கூட குளிப்பாட்ட இறங்குவ தில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக பெண் ஒருவர் அந்த குளத்தில் இறந்து கிடந்தார்.

    இந்நிலையில் முளகுமூடு பேரூராட்சி செயல் அலுவலர் வழிகாட்டுதலில் குளத்திலுள்ள பாசிகளை அகற்றி சுத்தம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இதனடிப்படையில் பேரூராட்சி தலைவர் ஜெனுஷா அஜித், செயல் அலுவலர் கிறிஸ்துதாஸ் தலைமையில் கவுன்சிலர்கள் விஜயகுமார், மகேஷ் மற்றும் அலுவலகபணியாளர்கள் சசிகுமார், றாபின்சன், ஸ்டீபன் ஆகியோர் முன்னிலையில் பணிகள் தொடங்கின.

    தொடர்ந்து 6 நாட்களாக தூய்மைபணியாளர்கள் 30 பேர் மற்றும் அலுவலக பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 40 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பல வருடங்களாக குளம் சுத்தம் செய்யப்படாத நிலையில் தற்போது குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்த செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவரை பொதுமக்கள் பாதசாரிகள் பாராட்டினர். தற்போது குளம் அழகிய சிறு காயலை போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் செயல் அலுவலர் கிறிஸ்துதாஸ் மற்றும் பேரூராட்சி தலைவர் ஜெனுஷா அஜித் ஆகியோர்களை பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×