search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    51-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலைகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் - மேயர் மகேஷ் தகவல்
    X

    51-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலைகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் - மேயர் மகேஷ் தகவல்

    • கோவில் விளை, காட்டு விளை, சின்னணைந்தன் விளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு புல்லுவிளை, மேலகாட்டு விளை, உடையப்பன் குடியிருப்பு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்
    • நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 51-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி யில் இன்று காலை மோட்டார் சைக்கிள், நடந்து சென்றும் ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின் போது அந்த வார்டு கவுன்சிலரும் மண்டல தலைவருமான முத்துராமன் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தார்.

    கோவில் விளை, காட்டு விளை, சின்னணைந்தன் விளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு புல்லுவிளை, மேலகாட்டு விளை, உடையப்பன் குடியிருப்பு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அந்த பகுதியில் சாலை வசதி, கழிவுநீர், ஓடை வசதி, மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.

    இதை தொடர்ந்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக 52 வார்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. புல்லுவிளை பகுதியில் சாக்கடை ஓடையை சீரமைக்க உடனடி நடவ டிக்கை எடுக்கப்படும்.

    கோவில்விளை, காட்டு விளை, சின்னணைந்தன் விளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியில் மண் சாலைகளை தார்சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியில் பேவர் பிளாக் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.பிள்ளையார்புரம், உடை யப்பன் குடியிருப்பு பகுதியில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×