search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு விழா
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு விழா

    • ஐப்பசி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
    • பல்லக்கு வாகனத்தில் அலங்கரிக்கபட்டு ஆலயத் திற்கு திரும்பிய சாமி சிலைகளுக்கு வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றானது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்.

    இத்திருக்கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை பங்குனி, ஐப்பசி மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 6-ந்தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐப்பசி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

    இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஐப்பசி ஆராட்டு வைபவம் நேற்று நடைபெற்றது. முன்ன தாக மேற்கு வாசல் வழியாக திருவிதாங்கூர் மன்னரின் பிரநிதி உடைவாள் ஏந்தி வர கருட வாகனத்தில் எழுந்தருளிய ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீகிருஷ்ண சுவாமி விக்ரகங்களுக்கு திருவட்டாறு காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தபட்டது.

    அதை தொடர்ந்து நள்ளிரவில் தளியல் பகுதியில் அமைந்துள்ள பரளியாற்றில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீகிருஷ் ணர் சாமி உற்சவமூர்த்தி களுக்கு ஆலய தந்திரி வஞ்சியூர் அத்தியறமடம் கோகுல் நாயாயணரூ தலைமையில் ஆராட்டு வைபவம் நடைபெற்றது. அதைதொடர்த்து பல்லக்கு வாகனத்தில் அலங்கரிக்கபட்டு ஆலயத் திற்கு திரும்பிய சாமி சிலைகளுக்கு வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். இதில் ஏராளமான பக்தர் கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×