என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே சமுதாய நலக்கூட கழிவு நீர் தொட்டி உடைந்ததால் குழிக்குள் விழுந்த பெண் பலி - கணவர்-குழந்தைகள் கண்முன்பு பரிதாபம்
- யாரும் எதிர்பாராத வகையில் அவர் நின்ற தரைபகுதி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுஜிஜா உடைந்து விழுந்த பள்ளத்திற்குள் விழுந்தார்
- அப்போது இடிந்து விழுந்த பகுதியில் மண்டப த்தில் உள்ள கழிவு நீர் தேக்கி வைப்பதற்காக ஒரு கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்க்) அமைப்பக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் திரு வட்டார் அருகே உள்ள மாத்தூர் ஒட்டலிவிளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளது.
இந்த சமுதாய நலக் கூடத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி மாலையில் நடை பெற்றது. இதில் ஏராள மானோர் பங்கேற்றனர். மாலையில் திருமண விருந்து நடைபெற்றது. விருந்து சாப்பிட்டவர்கள் கை கழுவுவதற்காக அதற்கான பகுதிக்குச் சென்றனர்.
முதலாறு பகுதியை சேர்ந்த மோகன்தாஸ், தனது மனைவி சுஜிஜா (வயது48) மற்றும் 2 மகன்களுடன் விழாவிற்கு வந்து இருந்தார். அவர்களும் விருந்து சாப்பி ட்டு விட்டு கை கழுவ வந்தனர். குடும்பத்தினர் அனைவரும் கை கழுவி சென்று விட்ட நிலையில் சுஜிஜா மட்டும் அங்கு நின்றார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர் நின்ற தரைபகுதி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுஜிஜா உடைந்து விழுந்த பள்ளத்திற்குள் விழுந்தார். அவர் மீது சிமெண்ட் சிலாப்புகளும் விழுந்தன.
அங்கு என்ன நடந்தது என்பது சிறிது நேரம் யாருக்கும் தெரியவில்லை. பின்னர் சுதாரித்துக் கொண்ட சிலர், சுஜிஜாவை காப்பாற்ற முயன்றனர். அப்போது மேலும் 2 பேர் பள்ளத்தில் விழுந்தார்கள். இது பற்றி குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
வேர்கிளம்பி பேரூ ராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமாரும் அந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கையை துரிதப்படு த்தினார். கணவர் மற்றும் குழந்தைகள் கண் முன்பு சுஜிஜா பள்ளத்திற்குள் விழுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்கிடையில் அந்த பகுதியில் நின்றவர்கள் ஒன்று சேர்ந்து, சுஜிஜா உள்பட 3 பேரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுஜிஜா ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்ப வம் குறித்த தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தார். அந்த பகுதியில் உள்ளவர்களிடம் அவர் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது இடிந்து விழுந்த பகுதியில் மண்டப த்தில் உள்ள கழிவு நீர் தேக்கி வைப்பதற்காக ஒரு கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்க்) அமைப்பக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதன் மேல் நின்றுதான் அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னர் கை கழுவ வேண்டும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்த கன மழையால் செப்டிக் டேங்க் பகுதி மண் அரிக்க ப்பட்டு இருந்தது. இதனால் தான் அந்தப் பகுதி இடிந்து விழுந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண விழாவுக்கு வந்த பெண் கட்டிடம் இடிந்து விழுந்து பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுஜிஜாவின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடைபெறுகிறது.






