என் மலர்
உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் சஸ்பெண்டு

- கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
- குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
நாகர்கோவில் :
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வை எழுதி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தேர்வுக்காக 116 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடக்கிறது.
தேர்வினை கண் காணிக்க தேர்வு மையத் திற்கு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தக்கலை அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவி பெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியிர் வேலவன் நியமிக்கப்பட்டு இருந்தார்.
அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை தொட்டு பேசி சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆசிரியர் வேலவன் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் வேலவன் மீதான புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ஆசிரியர் வேலவன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். மாணவியிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.