search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
    X

    கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

    • துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • மக்கள் ஒன்றிணைந்து சரக்கு பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் தொடங்கினர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட் டத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வுப் பணிகள் கடந்த 2017-ம்ஆண்டில் தொடங்கப்பட்டது. இதை யடுத்து கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றி ணைந்து சரக்கு பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் தொடங் கினர். இந்த இயக்கம் மூலம் துறைமுகத்திற்கு என நியமிக்கப்பட்ட அதிகாரி களோடு பலகட்டப் பேச்சு வார்த்தை, போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் சரக்குப்பெட்டக மாற்று முனைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த பகுதியில் மீண்டும் இந்த திட்டத்துக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவளம், கீழமணக்குடி, வடக்குத்தாமரைகுளம் சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு இயக்கம் மற்றும் இனையம் துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரி பெரியார் நகரில் அமைந்து உள்ள வட்டார முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் ஒருங்கிணைப் பாளர் பிரபா, துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, ஜனாப்மஸ்கலாம், ஸ்ரீதரன் மற்றும் நிர்வாகிகள் தாமஸ் பிராங்கோ, பெர்லின், காஸ்மிக், சுந்தர், சிலுவை இருதயம், வட்டார முதல்வர் ஜான்சன், அருட் பணியாளர்கள் கில்டஸ், கிஷோர், அன்பரசன், ஆன்டனி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், சாகர்மாலா திட்டத்தின் மூலம் கன்னியா குமரி மாவட்டத்தில் கொண்டு வர முயன்ற சர்வ தேச சரக்குப்பெட்டக மாற்று முனையம் திட்டம் இல்லை என்னும் தீர்மானத்தை வருகிற சட்டமன்ற கூட்டம் தொடரில் நிறைவேற்ற வேண்டும், மக்களின் தொழில் வளங்களுக்கும், குடியிருப்புகளுக்கும், மக்களின் உரிமைக் கும், கன்னியா குமரி மாவட்டத்தின் வரலாற்று பாரம்பரியங்களுக்கும் பெரும் பாதிப்பு நேரிடும் என 2015 முதல் 2020 வரை மேற்கொண்ட துறைமுக எதிர்ப்பு போராட்டங்களில் போடப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும். மேலும் ஒக்கிப்புயல் பேரிடர் காலத்தில் மக்களின் வாழ் வுரிமைக்காக போராடிய போராட்டங்களில் போடப் பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக சரக்குப்பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு இயக்க செயலாளர் ஜே.பி.வெனிஸ் வரவேற்று பேசி னார்.

    Next Story
    ×