என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோட்டார் ஆயுர்வேத கல்லூரியில் மாணவ-மாணவிகள் சார்பில் பொங்கல் விழா - உறியடி நிகழ்ச்சியும் நடந்தது
- மாணவர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி- சட்டை அணிந்து வந்திருந்தனர். மாணவிகளும் புத்தாடைகள் அணிந்து வந்திருந்தனர்.
- பொங்கலிட்டும் தங்கள் உற்சாகத்தை வெளிப் படுத்தினார்கள்.பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக முழக்கம்
நாகர்கோவில் :
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் நாளை ( 13-ந் தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மாணவ-மாணவிகள் பொங்கல் விழாவை இன்று உற்சாகமாக கொண்டாடி னார்கள். இதையடுத்து மாணவர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி- சட்டை அணிந்து வந்திருந்தனர். மாணவிகளும் புத்தாடைகள் அணிந்து வந்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து உறியடி நிகழ்ச்சி நடந்தது.இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் பொங்கலிட்டும் தங்கள் உற்சாகத்தை வெளிப் படுத்தினார்கள்.பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக முழக்கமிட்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள்.
Next Story






