search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே தென்னந்தோப்பில் வலையில் சிக்கிய மலை பாம்பு
    X

    சுசீந்திரம் அருகே தென்னந்தோப்பில் வலையில் சிக்கிய மலை பாம்பு

    • தென்னங் கன்றுகளை ஆடு, மாடுகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக தென்னங்கண்றுகளை சுற்றி வலைபோட்டு வேலி
    • வனத்துறையினர் ராட்சத மலைப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறை சகாயபுரம் பகுதியில் உள்ளது. இந்த தோப்பில் உள்ள தென்னங் கன்றுகளை ஆடு, மாடுகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக தென்னங்கண்றுகளை சுற்றி வலைபோட்டு வேலி அமைத்துள்ளார்.

    இந்த வலையில் இன்று காலை ராட்சத மலைப்பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது. இந்த நிலையில் சிவகுமார் இன்று காலை அந்த தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு உள்ள ஒரு வலையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று சிக்கியபடி வெளியில் வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. உடனே அவர் இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் தீயணைக்கும் படை வீரர்கள் சீனிவாசன், தளவாய், ரமேஷ்குமார் மற்றும் குழுவினர் அந்த தென்னந்தோப்புக்கு விரைந்து சென்றனர். அந்த தென்னந்தோப்பில் உள்ள வலையில் சிக்கி இருந்த ராட்சத மலை பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த ராட்சத மலைப்பாம்பு 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் தீயணைக்கும் படையினர் அந்த ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அந்த ராட்சத மலைப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

    Next Story
    ×