என் மலர்
உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மீன் வியாபாரி சாவு
- தனது லாரியை லைட் எதுவும் போடாமல் சாலையோரத்தில் நிறுத்தி இருந்தார்.
- மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபிமோன் (வயது 27), மீன் வியாபாரி. இவர் நேற்று இரவு தனது நண்பர் மெர்வின் ஜெஷோவுடன் தக்கலை பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
தக்கலை கோர்ட் அருகில் வரும்போது நாமக்கல், வள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனது லாரியை லைட் எதுவும் போடாமல் சாலையோரத்தில் நிறுத்தி இருந்தார். இதனால் நிலைதடுமாறி அபிமோன் லாரி மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அபிமோன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மெர்வின் ஜெஷோ சங்கான்கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்துபோன அபிமோன் உடலை போலீசார் கைப்பற்றி தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் ஒப்படைத்தனர். இது சம்மந்தமாக காயம் அடைந்த மெர்வின் ஜெஷோ தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் லாரி ஓட்டுநர் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இறந்துபோன அபிமோனுக்கு குமாரி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.






