என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் மீனவர்களின் வாரிசுகளுக்கான90 நாள் பயிற்சி முகாம் நிறைவு
    X

    கன்னியாகுமரியில் மீனவர்களின் வாரிசுகளுக்கான90 நாள் பயிற்சி முகாம் நிறைவு

    • ரூ.50 லட்சத்தில் 6 மாதகாலம் இலவச பயிற்சி வகுப்புகள்
    • பயிற்சி முடித்த 40 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு சான்றிதழ் வழங்கினார்

    கன்னியாகுமரி:

    தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பல்படை மற்றும் இதர பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக ரூ.50 லட்சத்தில் 6 மாதகாலம் இலவச பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

    இதையடுத்து தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக தலா 40 பேர் கொண்ட 3 குழுக்களுக்கு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் இலவசப்பயிற்சி வகுப்புகள் கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் உள்ள பயிற்சி மையங்களில் நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரியில் நடைபெற்ற இந்தப்பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமைதாங்கினார். தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் டி.எஸ்.பி.பிரதாபன் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரன்பிரசாத் சான்றிதழ்களை வழங்கி பேசினார். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×