என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பேச்சிப்பாறையில் 75 மி.மீ. மழை
  X

  திற்பரப்பு அருவி 

  பேச்சிப்பாறையில் 75 மி.மீ. மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
  • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 12.10 அடியாக உள்ளது.

  நாகர்கோவில்:

  குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளு குளு சீசன் நிலவுகிறது.

  மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித் தது. நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. சுசீந்திரம், ஆரல்வாய் மொழி, தக்கலை, தடிக்கா ரன் கோணம், கீரிப்பாறை பகுதிகளிலும் சாரல் மழை நீடித்தது.

  மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 75 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

  திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

  பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

  பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.25 அடியாக இருந்தது. அணைக்கு 1674 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 588 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 66.45 அடியாக உள்ளது. அணைக்கு 873 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணை யில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

  சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 8.53 அடியாகவும், சிற்றாறு-2-நீர்மட்டம் 8.62 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.40 அடியாகவும், மாம்பழத்து றையாறு அணையின் நீர் மட்டம் 34.53 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 12.10 அடியாக உள்ளது.

  மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

  பேச்சிப்பாறை-75, பெருஞ்சாணி-8, சிற்றாறு- 1-38.2, சிற்றாறு-2-23.6, பூதப்பாண்டி-1.2, களியல்- 20.5, கன்னிமார்-12.2, குழித்துறை-9.8, சுருளோடு- 10.4, தக்கலை-9.3, பாலமோர்-16.2, மாம்பழத்துறையாறு-1, கோழிபோர்விளை- 14.6, அடையாமடை-2.2, முள்ளங்கினாவிளை-8.2, ஆணைகிடங்கு-18.2.

  Next Story
  ×