search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு 70 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன
    X

    கலெக்டர் அரவிந்த் பறவைகளை பறக்க விட்ட காட்சி.

    குமரி மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு 70 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன

    • உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம் நிகழ்ச்சி
    • மாவட்ட வன அதிகாரி தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ளபுத்தளத்தில் உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம் குறித்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார்.

    கலெக்டர் அரவிந்த், வருவாய் அதிகாரி சிவ பிரியா, பால பிரஜாபதி அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ரஷ்யா, சைபிரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த உள்ளான், ஆளா உள்ளிட்ட பறவைகளை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.

    பின்னர் அந்த பறவை களை கலெக்டர் அரவிந்த், வன அலுவலர் இளைய ராஜா, பறவைகள் ஆராய்ச்சி யாளர் பாலச்சந்திரன் உள்ளி ட்டோர் பறக்க விட்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறு கையில், குமரி மாவட்டத்தில் புலம்பெயர்ந்த பற வைகள் அதிக அளவு வருகின்றன. பறவைகள் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறியும் வகையில் பறவைகளின் கால்களில் வளையங்கள் மாட்டப்படுகிறது.

    ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன.இங்கு இருந்தும் பறவை கள் அங்கு செல்கிறது. சுற்றுச்சூழல் மாசடைவதன் காரணமாக பறவைகள் வரத்து குறைய தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்ற போது 170 வகையான 70 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    சைபிரியா,ரஷ்யா, ஆர்டிக் பகுதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் கன்னியாகுமரி மாவட்டம் வருகின்றன. சூரிய ஒளி அடிப்படையில் இந்த பறவைகள் வருகிற நிலையில் தற்போது ஒளியில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அவைகள், திசைமாறிச் சென்று கட்டிடங்களில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    ஒரு வருடத்திற்கு 10 கோடி பறவைகள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்த பறவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் மூலம் பொது மக்களுக்கு பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    Next Story
    ×