search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தின்  52-வது ஆண்டு விழா
    X

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52-வது ஆண்டு விழா

    • 6 கோடியே 79 லட்சத்து 94 ஆயிரத்து 120 பேர் பார்வையிட்டு உள்ளனர்
    • 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவே கானந்தர் தவமிருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்ட விவேகானந்த கேந்திர நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1964-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணி தொடங்கியது.

    6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணி 1970-ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டது.

    அன்று முதல் இந்த மண்டபத்தை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த மண்ட பம் நிறுவி 51 ஆண்டுகள் நிறைவடைந்து 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவிய 52-வது ஆண்டு விழா விவே கானந்தர் பாறையில் நேற்று முன்தினம் கொண்டாட ப்பட்டது.

    இதையொட்டி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிடுவதற்காக படகில் முதன் முதலாக வந்து இறங்கிய ஜார்க்கண்ட மாநிலம் ஜாம்செட்பூைர சேர்ந்த சுற்றுலாப் பயணியான பாசு டியோ கவுர் என்பவருக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நினைவு பரிசை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி. தாணு மற்றும் விவேகா னந்தர் பாறை நினவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர்அவரை வாழ்த்தி வரவேற்று நினைவுபரிசுகள்வழங்கி கவுரவித்தார்கள்.

    இவர் வந்து பார்வையிட்டதன் மூலம் கடந்த 52 வருடங்களில் நேற்று முன்தினம் வரை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 6 கோடியே 79 லட்சத்து 94 ஆயிரத்து120பேர் பார்வையிட்டுஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    Next Story
    ×