என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
குளச்சல் அருகே வைத்தியரை தாக்கி நகை பறித்த 3 கொள்ளையர்கள்
- மோட்டார் சைக்கிளில் தப்பியவர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
- 4 பவுன் நகையை பறித்து விட்டு அந்த வாலிபர் ஓட்டம் எடுத்தார்.
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் படுவாக்க ரையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பொன் விளையில் நாட்டு மருத்துவ வைத்தியசாலை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை இவர் நோயாளி ஒருவருக்கு மருந்து எண்ணை கொடுத்து விட்டு உள் அறையில் கையை கழுவிக்கொண்டிருந்தார். அப்போது வைத்திய சாலைக்குள் நுழைந்த ஒரு வாலிபர், ஜார்ஜை பின்னால் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் அவர் நிலைகுலைந்த நேரத்தில் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு அந்த வாலிபர் ஓட்டம் எடுத்தார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ், பின்னர் சுதாரித்துக் கொண்டு திருடன்...திருடன்.. என கூச்சலிட்ட படியே விரட்டினார். அப்போது சாலையில் 2 பேர் மோட்டார் சைக்கிளுடன் தயாராக இருந்துள்ளனர். நகை பறித்த வாலிபர் அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி யதும், 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
கொள்ளையர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், குளச்சல் ரோடு நோக்கி சென்றது. இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசில் ஜார்ஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வைத்திய சாலைக்குள் புகுந்து வைத்தி யரிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.