search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பழுதடைந்த 290 மின்கம்பங்கள்   மாற்றப்பட்டுள்ளது
    X

    குமரி மாவட்டத்தில் பழுதடைந்த 290 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது

    • தடை இல்லாத மின்சாரம் வழங்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் தகவல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மற்றும் பலத்த காற்று வீசி வருவதால் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்கள் மற்றும் உயர்மின் அழுத்த பாதைகளில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் பத்மகுமார் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மின் பகிர்மான வட்டத்தில் தடை இல்லாத மின்சாரம் வழங்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அதன் படி கன்னியாகுமரி மாவட் டத்தின் மூன்று கோட்டங் களில் கீழ்க்கண்ட பராமரிப்பு பணிகள் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் மூன்று கோட்டங் களில் உள்ள உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பா தைகளில் பொறியாளர்கள், இதர பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களைக் கொண்டு மின்கம்பிகளில் 44148 இடங்களில் உரசி கொண்டிருந்த மரக்கிளைகள் மற்றும் தென்னை ஓலைகள் வெட்டி அகற்றப் பட்டுள்ளதாகவும், 290 பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,

    134 சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீர்செய்யப் பட்டுள்ளதாகவும், புதிதாக 81 மின்கம்பங்கள் தாழ்வான மின்பாதைகளுக்கு இடையே அமைக்கப்பட் டுள்ளதாகவும், பழைய 201 இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டு புதிய இன்சு லேட்டர்கள் வைக்கப்பட் டுள்ளதாகவும், 205 ஏ.பி. சுவிட்ச்சுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு சீரான மின்சாரம் வழங்க நடவ டிக்கை மேற்கொள் ளப்பட் டுள்ளதாகவும்,

    503 மின் மாற்றிகளில் பராம ரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாகவும் அந்த அறிக் கையில் கூறி இருந்த அவர், மேலும் தொடர்ந்து இப்பணிகளை பொது மக்கள் எங்களுக்கு ஒத்து ழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.

    Next Story
    ×