search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1800 அடி உயர மருந்துவாழ் மலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 26-ந் தேதி மகாதீபம்
    X

    1800 அடி உயர மருந்துவாழ் மலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 26-ந் தேதி மகாதீபம்

    • மாலை 6 மணிக்கு மருந்து வாழ் மலை உச்சியில் “மகா தீபம்” ஏற்றப்படுகிறது.
    • 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும்.

    கன்னியாகுமரி :

    கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரமான வருகிற 26-ந்தேதி கார்த்தி கை தீபத்திருவிழா கொண் டாடப்பட உள்ளது.

    இதை யொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியா குமரி அருகே பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்து உள்ள குமரியின் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில் களிலும் குடங்களில் காணிக்கையாக பெறப்பட்டு வருகிறது. அந்த எண்ணெய் குடங்கள் அனைத்தும் 26-ந் தேதி காலை பொற்றையடியில் அமைந்து உள்ள ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்படுகிறது.

    பின்னர் அங்கு இருந்து மருந்துவாழ்மலை தெய்வீகப் பேரவை சார்பில் மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு மருந்து வாழ் மலை உச்சியில் "மகா தீபம்" ஏற்றப்படுகிறது.

    முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்த லிங்க சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷே கமும், அன்னதானமும் நடக்கிறது. மருந்துவாழ்மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் தெரியும். 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும்.

    மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு வீடுகளில் உள்ள வாசல் முன்பு பெண் கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திரு விழாவை கொண்டாடு வார்கள். வீடுகள்தோறும் கொழுக்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார் செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்வார்கள்.

    கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கி றது. சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்ற வைகளை கொளுத்தி விளையாடுவார்கள்.

    Next Story
    ×