search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.26 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் - திருமண மண்டபத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    X

    சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.26 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் - திருமண மண்டபத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

    • குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தப்படாமல் தள்ளிப் போய் உள்ளது. எனவே வேறு ஒரு தேதியில் பதிவு செய்வதற்கு முயற்சி செய்த போது அந்த தேதி யில் திருமண மண்டபம் காலியாக இல்லை.
    • எனவே முன்பணத் தொகையை திரும்ப தருமாறு மண்டபத்தின் செயலாளரிடம் அய்யப்பன் விண்ணப்பித்து உள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை.

    நாகர்கோவில்,

    குமரி மாவட்டம் கோட்டாரைச் சேர்ந்த அய்யப்பன், கோட்டாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரூ. 19 ஆயிரம் முன்பணம்செலுத்தி திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார்.

    ஆனால் சில காரணங்க ளால் குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடத்தப்படாமல் தள்ளிப் போய் உள்ளது. எனவே வேறு ஒரு தேதியில் பதிவு செய்வதற்கு முயற்சி செய்த போது அந்த தேதி யில் திருமண மண்டபம் காலியாக இல்லை.

    எனவே முன்பணத் தொகையை திரும்ப தருமாறு மண்டபத்தின் செயலாளரிடம் அய்யப்பன் விண்ணப்பித்து உள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை.

    எனவே மன உளைச்சலுக்கு ஆளான அய்யப்பன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலை வர் சுரேஷ், உறுப்பினர் ஆ. சங்கர் ஆகியோர் விசாரித்த னர்.

    தொடர்ந்து திருமண மண்டபத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட அய்யப்ப னுக்கு நஷ்ட ஈடாக ரூ. 5 ஆயிரம், முன்பணத் தொகை ரூ. 19 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 2 ஆயிரத்து 500 ஆக மொத்தம் ரூ. 26 ஆயிரத்து 500-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×