search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளம் அருகே குளத்தில் கட்டுக்கட்டாக கிடந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்
    X

    ஆசாரிபள்ளம் அருகே குளத்தில் கட்டுக்கட்டாக கிடந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்

    • கவரில் இருந்த ரூ.2000 நோட்டு கட்டுகள் முழுமையாக நனையாமல் பாதி அளவு நனைந்த நிலையில் இருந்தது.
    • ரூ.2000 ரூபாய் கட்டுகள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவியது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிப்ப ள்ளம் அருகே வேம்பனூரில் பாசன குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகி றது.

    குளத்தில் தண்ணீர் வற்றியதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இன்று மதியம் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்தின் கரை பகுதியில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்தது.

    அதில் ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதைப்பார்த்த அந்த சிறுவர்கள் குளத்தின் கரையில் கிடந்த கவரை எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கவரை பிரித்து பார்த்தபோது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கட்டுக்கட்டு கட்டாக இருந்தது.

    வங்கியில் இருந்து எடுத்ததற்கான அடையாளங்களும் அதில் இருந்தன. கவரில் இருந்த ரூ.2000 நோட்டு கட்டுகள் முழுமையாக நனையாமல் பாதி அளவு நனைந்த நிலையில் இருந்தது. 20 கட்டுகள் கவரில் இருந்தது. குளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டு கட்டுகள் தண்ணீரில் நனைந்து இருந்ததால் சேதம் அடைந்து காணப்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளை வெயிலில் காய வைத்தனர்.

    குளத்தில் கட்டு கட்டாக ரூ.2000 ரூபாய் நோட்டுகள் சிக்கிய தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.2000 ரூபாய் கட்டுகள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட ரூ.2000 ரூபாய் நோட்டு கட்டுகள் குளத்துக்குள் எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×