என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
குமரி மாவட்டத்துக்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை
- தமிழகத்துடன் இணைந்த தினம்
- கலெக்டர் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற 12-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
தமிழகத்துடன் குமரி இணைந்த தினத்துக்கு உள்ளூர் விடுமுறை செலாவணிமுறி சட்டத்தின்படி அறிவிக்கப்பட வில்லை என்பதால் 1-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






