என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
- சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி மோட்டார் சைக்கிளில் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
- அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டை புதூரைச் சேர்ந்தவர் ஸ்ரீநிசாந்த் (வயது 19).
இவருக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி மோட்டார் சைக்கிளில் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து அவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.
தொடர்ந்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீநிசாந்தை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அவரது நண்பர் அய்யப்பன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






