என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி தனியார் கொரியர் நிறுவனத்திற்கு ரூ.10,000 நஷ்ட ஈடு
- குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் சுங்கான்கடையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் பெங்களுரிலுள்ள தனியார் கொரியர் நிறுவனம் மூலம் தனக்கு மருந்து பார்சல் அனுப்புமாறு அங்குள்ள ஒரு மருத்துவரிடம் கூறியுள்ளார்.
அவரும் மருந்தை கொரியர் மூலம் நாகர்கோ விலுக்கு அனுப்பியுள்ளார். நாகர்கோவிலுள்ள அதே தனியார் கொரியர் நிறுவனம் ராஜ்குமாரின் வீட்டு முகவரியை சரியாக விசாரிக்காமல் மருந்து பார்சலை பெங்களுரூக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டனர்.
இதுகுறித்து கொரியர் நிறுவனத்திடம் கேட்டதற்கு சரியான பதில் கொடுக்க வில்லை. இதனால் வழக்கறி ஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகி யோர் கொரியர் நிறுவ னத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர் வோருக்கு ரூ.10,000 நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.3,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.






