search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    தக்கலை அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • சுமார் 5 மணி நேரம் நடந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.

    தக்கலை :

    தக்கலை அருகே கோதநல்லூர் முட்டைக்காடு பாறையங்கால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்றது.

    இதன் அருகில் கல்லாம் பொத்தை, கோயிக்காவிளை, கிருஷ்ணன் நகர், செக்காலர் தெரு, குலாலர் தெரு, வழிக்கலாம்பாடு போன்ற ஊர்களில் நூற்றுக்க ணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் தொடக்க பள்ளி, கோவில்கள், சர்ச் போன்ற வை உள்ளன. டவர் அமைத் தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகளால் கேன்சர் போன்ற புற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல் செல்போன் டவர் அமைக்கும் வேலையை தனியார் நிறு வனம் தொடங்கியதாக கூறப் படுகிறது. இதை அறிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம் செய்த னர். போராட்டத்தில் கோத நல்லூர் பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிரேமா குமாரி, துணைத்தலைவர் டேவிட், வார்டு உறுப்பி னர்கள் அம்பிகா, சுனிதா, அஜிதா மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குமார புரம் கிராம நிர்வாக அலு வலர் கலைசெல்வன், கொற்றிகோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அரசின் உரிய அனுமதி பெற்று வேலை செய்யலாம் என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 5 மணி நேரம் நடந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.

    Next Story
    ×