search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காணிமடம் மந்திராலயத்தில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா
    X

    கோப்பு படம் 

    காணிமடம் மந்திராலயத்தில் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா

    • 27-ந்தேதி தொடங்கி டிசம்பர் 1-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி நாளை பங்கேற்பு

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தில் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயம் உள்ளது. இங்கு யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து டிசம்பர் 1-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    இதைெயாட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு ஹோமம், புனித நீரால் பகவான் யோகி ராம்சுரத்குமார் விக்கிரகத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு 72 மணி நேரம் ஜெபிக்கப்படும் அகண்ட நாமம் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து பூஜை, நெல்லை வேதா ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம், உச்சிகால பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, பூஜை நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு ேஹாமம், யோகி ராம்சுரத்குமார் விக்ரகத்திற்கு அபிஷேகம், பூஜை, கடலில் இருந்து வந்த சித்தி முத்தி வலம்புரி விநாயகர் கோவிலுக்கு வருஷாபிஷேகம், திருவாசகம் முற்றோதுதல் ஆகியவை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து தக்கலை யோகிராம் ஹெல்த்கேர் சென்டர் சார்பில் இலவச மருத்துவ முகாம், உச்சிகாலை பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு பூஜை, இசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    நாளை (30-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு ஹோமம், யோகி ராம்சுரத்குமார் விக்ரகத்திற்கு அபிஷேகம், பூஜை, மாஞ்சாங்குடியிருப்பு ரகுராம் ஹோமியோ சித்தா ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு மூன்று முகயோகி ராம்சுரத்குமார் விக்கிரகத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து மந்திராலய அலுவலகம், நூலகம் ஆகியவற்றையும் திறந்து வைத்து சாதுக்கள் பூஜையில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து உச்சிகால பூஜை, அன்னதானம் நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு பொன்காமராஜ் சுவாமிகள் பஜனை குழுவினர் நடத்தும் ரம்யம் பஜனை, பூைஜ ஆகியவை நடைபெறுகிறது. 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு ஹோமம், முக்கடல் புனித தீர்த்தத்தால் யோகி ராம்சுரத்குமார் விக்ரகத்திற்கு அபிஷேகம், அகண்ட நாமம் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், பூஜை, ஆன்மிக சொற்பொழிவு, கலசாபிஷேகம், 11.30 மணிக்கு யோகி ராம்சுரத்கு மார் விக்ரகத்திற்கு வெள்ளிக்கவ சம் அணிவித்தல், பூஜை, அன்ன தானம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து புஷ்பாபிஷேகம், பிற்பகல் 3 மணிக்கு யோகிராம்சுரத்குமார் பஞ்சலோக விக்ரகம் அலங்காரத்துடன் ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு சாதுக்கள் பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மந்திராலய குரு பொன் காமராஜ் சுவாமிகள், தவசி, அபிமன்யு மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×