search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த சாரல் மழை
    X

    பேச்சிப்பாறை ஆணை (கோப்பு படம்)

    குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த சாரல் மழை

    • பேச்சிப்பாறை அணை பகுதியில் 3.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
    • பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 539 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவிலும் மந்தமான வானிலையே நிலவி மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன.

    இதைத் தொடர்ந்து இரவில் பல இடங்களில் சாரல் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தோவாளை, மார்த் தாண்டம், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும் மலையோர பகுதி கள் மற்றும் அணை களின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    இந்த மழை பேச்சிப்பாறை அணை பகுதியில் 3.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மேலும் தக்கலை-4.2, கோழிப்போர்விளை-3.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. மழை காரணமாக சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    இதற்கிடையே பேச்சிப்பாறை அணைக்கு வினா டிக்கு 539 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீரும் வந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 537 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 525 கன அடி தண்ணீரும் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலையிலும் வெயில் அடிக்கவில்லை. வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    Next Story
    ×