search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் 

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

    • ஜனவரி 2-ந்தேதி நடக்கிறது
    • அதிகாலை 3.30 மணிக்கு நடை திறப்பு திவ்விய தரிசனம் நடைபெறும்.

    கன்னியாகுமரி:

    தென்தமிழகத்தில் 108 வைணவ திருத்தலங்களில் கன்னியாகுமரி மாவட்டத் தின் மிகவும் சிறப்பு மிக்க கோவில்களின் ஒன்றாக காணப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகும். பிரசித்தி பெற்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டு நம் முன் னோர்களால் பாரம்பரிய வகையில் செயல்படுத்தி வரும் ஆதிகேசவ பெரு மாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது.

    இது 16,008 சாளக்கி ராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. கரு வறையில் மூன்று நிலை வாயில்கள் உள்ளன. திரு முகம், திருக்கரம், திருப்பா தம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழைவு வாயி லிலும் காணலாம்.

    திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கை யையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காண லாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ஐம்படை யினையும் காணலாம். தரை யில் தாயாருடன் கூடிய பெரு மாளின் உலோகத் திருமேனி யும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்க ளையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளை யும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பா தம் இவற்றை இதே வரிசைக்கிர மத்தில் தரிசிப்பது இக்கோவி லின் மரபு ஆகும்.

    இக்கோவிலின் பிர தான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.இக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா வரும் ஜனவரி 2-ந்தேதி நடக்க உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு நடை திறப்பு திவ்விய தரிசனம் நடைபெறும். அதை தொடர்ந்து அகண்ட நாம ஜெபம், சிறப்பு அபிஷேகம், மலர்முழுக்கு தொடக்கம் நடைபெறும். மதியம் அன்னதானமும், மாலையில் தீபாராதனையும் ஆன்மீக சொற்பொழிவு, இரவு பரமபத வாசல் திறப்பு சுவாசி கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் போன்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகனகுமார் செய்து வருகிறார்.

    Next Story
    ×