search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீச் ரோடு முதல் செட்டிகுளம் வரை போக்குவரத்துக்கு தடை
    X

    தடுப்பு வைத்து சாலை மூடப்பட்டு உள்ளதை காணலாம்.

    பீச் ரோடு முதல் செட்டிகுளம் வரை போக்குவரத்துக்கு தடை

    • பாதாள சாக்கடை பணி இன்று தொடங்கியது
    • மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 95 சதவீதம் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகளை அழைத்து பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் நாகர்கோவில் நகரின் பிரதான சாலையாக கருதப்படும் பீச்ரோட்டில் இருந்து செட்டிகுளம் வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும் அந்தப் பணியை இன்று தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறுவதை யடுத்து அந்த சாலையில் போக்குவரத்தை மாற்றிவிட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இன்று காலை 11 மணி முதல் அந்த சாலையில் பஸ் போக்கு வரத்து மாற்றி விடப்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் பீச்ரோடு பகுதியில் இருந்து செட்டிகுளம் வரும் சாலையை தடுப்பு வைத்து அடைத்தனர்.

    தொடர்ந்து பஸ்கள் அனைத்தும் மாற்றி விடப்ப ட்டன. கன்னியாகுமரியில் இருந்து வந்த பஸ்கள் அனைத்தும் ராமன்புதூர் ஜங்ஷன் வழியாக செட்டி குளத்திற்கு வந்தது.

    இதே போல் செட்டி குளத்தில் இருந்து பீச்ரோடு செல்லும் பஸ்களும் மாற்று பாதையில் விடப்பட்டது. செட்டிகுளம் பகுதியில் சாலைகள் தடுப்பு வைத்து மூடப்பட்டது. இந்த வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் கம்பளம் ஜங்ஷன், ஈத்தாமொழி பிரிவு ரோடு, பீச்ரோடு ஜங்ஷன் வழியாக இயக்கப்பட்டது.

    பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ராமன்புதூர், செட்டிகுளம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீ சார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    பஸ் போக்கு வரத்து மாற்றி விடப்பட்டாலும் இருசக்கர வாகனங்கள் மட்டும் அந்த சாலை வழி யாக வந்தது. பாதாள சாக்கடை பணி தொடங்கிய பிறகு முழுமையாக அந்த வழியாக வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும்.

    அந்த சாலையில் 5 மீட்டர் அளவிற்கு சாலை பணிக்காக தோண்டும்போது மணல்கள் சாலையின் இருபுறமும் குவித்து வைக்கப்படும். பொதுமக்கள் நலன் கருதி வாகனங்கள் அந்த வழியாக செல்லக்கூடாது என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×