என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை சீரமைப்பு பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தபோது எடுத்த படம்
தேங்காப்பட்டணத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணி
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி - பழைய உச்சக்கடை சாலையில் மழை காலங்களில் தேங்காப்பட்டணம் பனங்கால் முக்கு பகுதியில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் இந்த சாலை வழயாக நடந்து செல்லவும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர்.
எனவே சாலையை உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இப்பகுதியில் சாலையை உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று அவர், நெடுஞ்சாலை துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்ததன் அடிப்படையில் தேங்காய்பட்டணம் பனங்கால்முக்கு பகுதியில் சாலையை உயர்த்தி சீரமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில்ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் சாலையை உயர்த்தி தார் போடும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெகுபதி, தேங்காப்பட்டணம் கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் அலி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் ஷேக்முகமது, அசோகன், சசிதரன், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகர், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






