search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டுவாழ்மடத்தில் ரெயில்வே மேம்பாலம்
    X

    ஊட்டுவாழ்மடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக விஜய்வசந்த் எம்.பி. நேரில் ஆய்வு செய்தபோது எடுத்த படம் 

    ஊட்டுவாழ்மடத்தில் ரெயில்வே மேம்பாலம்

    • விஜய்வசந்த் எம்.பி. நேரில் ஆய்வு
    • ஊட்டு வாழ்மடம் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி பூட்டப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை அடுத்து ஊட்டு வாழ்மடம் மற்றும் கருப்புக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் இருக்கின்றன.

    இங்கு ஆயிரக்கணக் கான மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். அப்பகுதியில் கோட்டார் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலை யத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் செல்கின்றன, இதனால் ஊட்டு வாழ்மடம் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி பூட்டப்பட்டு வருகிறது.

    இந்த கேட் வழியாக மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் வேலைக்கு செல்பவர்களும் சென்று வருகின்றனர். ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் இவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகி ன்றனர்.

    இந்நிலையில் அப்பகுதி மக்கள் விஜய் வசந்த் எம்.பி.யிடம் இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தரும்படி கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று விஜய் வசந்த் எம். பி. அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் இந்த பகுதி மிகவும் தாழ்வான பகுதி. மேலும் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கனமழை காலங்களில் தண்ணீர் தேங்கும் நிலை இருக்கிறது. எனவே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்த னர். அவர்களின் கோரிக் கையை ரெயில்வே நிர்வா கத்திடம் சொல்லி விரை வில் மேம்பாலம் அமைத்து தர ஆவன செய்வேன் என அப்பகுதி மக்களிடம் விஜய் வசந்த் எம்.பி. தெரி வித்தார்.

    இந்த ஆய்வின்போது ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சூசை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், 5-வது காங்கிரஸ் மண்டல தலைவர் கண்ணன், 26-வது வார்டு செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் சித்ரா, மற்றும் வசந்தி, வினோத், குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×