search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை
    X

    கலெக்டர் ஸ்ரீதர் பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் முன்னாள் கலெக்டர் அரவிந்த் பொறுப்புகளை ஒப்படைத்தார். 

    குமரி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை

    • இன்று பொறுப்பு ஏற்பு
    • கலெக்டர் ஸ்ரீதர் பேட்டி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டராக இருந்த அரவிந்த் மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    குமரி மாவட்ட புதிய கலெக்டராக சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனராக இருந்த பி.என். ஸ்ரீதர் நிய மிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் இன்று 6-ந்தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். பொறுப்புகளை கலெக்டர் அரவிந்த் அவரிடம் ஒப்படைத்தார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதி காரி சிவப்பிரியா, ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், பத்மநாபபுரம் சப் கலெக் டர் கவுசிக், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் வீராசாமி மற்றும் அதிகாரிகள் புதிய கலெக் டர் பி.என். ஸ்ரீதருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் பி.என். ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த திட்டங் களை செயல்படுத்த தனி கவனம் செலுத்தி நடவ டிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை அளிக் கப்படும். அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களின் பிரச்சினைகள் குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற் கொள்வேன். குமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக் கப்படும். நகரப்புறம் அதிகம் உள்ள மாவட்டமாகும்.

    சுற்றுலாத்துறை சுற்றுச்சூழல் மீனவர் பிரச்சனை வனத் துறை உள்ளிட்ட திட்டங்க ளுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். சென்னை-கன்னியாகுமரி தொழில் வரி சாலை திட்டத்தை பொருத்தமட்டில் தற்பொ ழுது தென்காசி நெல்லை மாவட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் அதற் கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    புதிதாக பொறுப் பேற்றுக் கொண்ட கலெக் டர் பி.என். ஸ்ரீதர் குமரி மாவட் டத்தின் 52-வது கலெக்டர் ஆவார். கலெக்டர் பி.என் ஸ்ரீதருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும்.

    ஏற்கனவே திண்டி வனத்தில் சப்-கலெக்டராக 2 ஆண்டுகள் பணிபுரிந்த பி.என்.ஸ்ரீதர் தொடர்ந்து பெருநகர சென்னை மாநக ராட்சி மத்திய வட்டார இணை இயக்குனராக 2 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

    Next Story
    ×