search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்திற்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வந்தன
    X

    பறவைகளை படத்தில் காணலாம்.

    குமரி மாவட்டத்திற்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வந்தன

    • கடந்த ஆண்டை விட இருமடங்கு இனங்கள்
    • அரிய வகை அமூர் வல்லூறுகள் இந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டன

    நாகர்கோவில்:

    ஆண்டுதோறும் 2 பருவ மழைகள் பெய்யும் குமரி மாவட்டத்தில் பெய்வதால், நீர் நிலைகள் நிறைந்து காணப்படும்.

    இதனால் இங்குள்ள சீதோஷ்ண நிலை, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் குமரி மாவட்டம் வருவது வழக்கம்.

    அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குமரி மாவட்டத்தில் வசிக்கும் இந்த பறவைகள், பிப்ரவரி மாதம் இங்கு இருந்து இடம் பெயரும். குமரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் வரும் பறவை இனங்கள் எவை? எத்தனை பறவைகள் வருகின்றன என்பதை வனத்துறை கணக்கெடுத்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு முதல் கட்டமாக 20 நீர் நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமை யில் இந்த பணி நடைபெற்றது.

    சுமார் 50 பறவைகள் ஆர்வலர்கள், வனப்பணி யாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பறவைகள் வந்திருப்பது உறுதியானது. கடந்த ஆண்டு 72 பறவை இனங்கள் வந்ததாக கணக்கெடுப்பில் உள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு அது இருமடங்காக அதிக ரித்து 163 பறவை இனங்கள் வந்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக ஊசிவால் வாத்து, நீல சிறகு வாத்து, தட்டை வாயன், பொன்னிற உப்பு கொத்தி, சாம்பல் உப்பு கொத்தி, பேதை உள்ளான், அறிவாள் மூக்கு மற்றும் ஏராளமான உள்ளுர் பறவைகளும் வந்துள்ளன.

    மொத்தம் 20 குழுக்களாக பிரிந்து நடத்திய இந்தக் கணக்கெடுப்பில் மொத்தம் 163 இனத்தைச் சேர்ந்த 10,094 பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. குறிப்பாக அரிய வகை அமூர் வல்லூறுகள் இந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×